ஆன்மீகம் வியாபாரமா ... Editorial of a Leading Daily Paper

ஆன்மீகம் வியாபாரமா ?


உலகத்தில் ஒருவரையும் நம்பாதே குருநாதனை தவிர என்பது பிரபலமான மூதுரை. ஆனால் உண்மையான குருவை தெரிந்து கொள்வது எப்படி?  அவருடைய தன்மை என்ன ? எப்படி இருப்பார் ? அடிக்கடி முக்கிய புள்ளிகள் தரிசனம் செய்தால் அவர் நம்ப தகுந்த குரு ஆகிவிடுவாரா? பெரிய அளவில் நிகழ்ச்சிகள், யாகங்கள் செய்தால் ஜகத்குருவா? நாள் தவறாமல் தொலைக்காட்சிகளில் காட்சி தந்தால் மஹாஸ்வாமியா? வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டால் யோகியா? ஆபரணங்களை ஷிரிஷ்ட்டித்தால் அவதார புருஷரா? மாபெரும் மாளிகைகள் காட்டியதால் பரமஹம்ச பரிவ்ராஜகர் ஆவாரா? கோடி கோடி பணம் வசூல் செய்து விட்டால் சித்த புருஷரா? விருப்பு வெறுப்புகள் உள்ளவர்கள் லாபியிங் செய்பவர்கள் பீடாதிபதிகளா? யார் உண்மையான குரு?

இன்றய குருமார்கள் சிஷ்யன் எவ்வளவு கொடுப்பான்? எவற்றை அளிக்கக்கூடியவன்? எந்த வி.ஐ.பி அழைத்து வரக்கூடியவன் என்பதயே பார்க்கிறார்கள். வேறு ஒருவருக்கு போட்டியாக வளர்வதை லக்ஷியமாக கொண்டவர்களே தவிர சனாதன தர்மத்தை காப்பாற்றுவது சிறிதளவும் தென்படாது. ஆச்சிரியம் என்னவென்றால் இவர்கள் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் சம்பிரதாயத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும். ஆனால், அவை மக்களை ஈர்ப்பதற்கும், பணத்தை ஈட்டுவதற்கும் மட்டுமே. தம் ஆஸ்ரமத்தில் உள்ளவர்களை புனிதமான மேல் நிலைக்கு கொண்டு வர இயலாதவர்கள், உலகத்திற்கு உபதேசம் செய்து கொண்டிருப்பார்கள்.

சனாதன தர்மத்தை சரியாக பின்பற்றி நடந்துகொள்ளும் குருமார்கள் இந்தகர்மபூமியை தாண்டி போகாத கட்டுப்பாட்டை கடைபிடிப்பார்கள். ப்ரஹமநிஷ்டையுடன் ப்ரஹ்மசர்யத்தை கடைபிடித்து பஞ்சேந்திரியங்களின் மீது கட்டுப்பாட்டுடன் அரிஷ்டவர்கங்கள்  அதாவது மனதில் உள்ள ஆறுவகை தீயகுணங்களை ஜெயித்து நேர்மையுடனும் நியாய புத்தியுடனும் இருப்பார்கள். ஒவ்வொரு மாதமும் சாதுர்மாஸ்ய விரதத்தை கடைபிடிப்பார்கள். இவற்றையெல்லாம் கடைபிடிக்க முடியாத குருமார்கள் தமது தவறான விளக்கங்களுடன் மக்களை நம்ப வைப்பார்கள். சனாதன தருமத்தில் உள்ள புனிதமான குருபரம்பரை அமைப்பைப்பற்றிய அடிப்படை புரிதல் இல்லாததை ஆதரமாக பயன்படுத்தி மக்கள் மனங்களில் குழப்பத்தை உண்டாக்கி பக்தியை விட பயத்தை வளர்த்து ஆன்மிகம் பெயரில் மக்களை வசப்படுத்துக்கொண்டு மக்களின் செல்வத்தை தங்களுடைய புகழ் பரவுவதற்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். முதுபெரும் புலவர்கள் நேர்மையான அதிகாரிகள் இதுபோன்ற ஆஸ்ரமங்கள் பணம் சம்பாதிக்கவே என்று சொல்கிறார்கள் என்றால் சாமானியர்கள் எவ்வளவு மடைமையில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

ஒருவரை குருவாக ஏற்பதற்கு முன் மக்கள் பார்க்கவேண்டியது அந்த பீடத்தின் குருபரம்பரை வரலாறே தவிர கட்டிடங்கள் மாளிகைகள் அல்ல. பகவத்கீதை 4 வது அத்யாயம் 13 வது ஸ்லோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனருக்கும், முண்டகோபநிஷத் 1 ண்ணாம் அத்யாயம் 20 வது ஸ்லோகம்; ஸ்கந்த பூராணம் குரு கீதை 62 ம் ஸ்லோகத்தில் பரமசிவன் பார்வதிக்கு குரு பரம்பரையின் சிறப்பை மேன்மையை விளக்கியுள்ளார். கிருஷ்ண யஜுர்வேதம் தைத்திரீய உபநிஷத்தில் குரு பரம்பரையில் உள்ள குருஷிஷ்ய பந்தம் சிஷ்யன் வரவிருக்கும் தலைமுறைக்கு எப்படி குரு ஆகமுடியும் என்ற விஷயம் இருக்கிறது. மாத்ரு தேவோ பவ (தாயே தெய்வம்) என்று சொன்ன போதிலும் தாயை பரமகுருவாக செய்துகொண்டு எந்த நபரும் குரு தன்மை அடைய முடியாது.

சனாதன தர்மத்தில் உள்ள த்வைதம் அத்வைதம் விஷிஷ்டாத்வைத சம்பரதாயங்களில் ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியர், மத்வசாரியார் கூட தங்களுடைய குரு, பரமகுருகளை சேவித்தார்கள். த்ரேதாயுகத்தில் ஸ்ரீராமர் வஷிஸ்ட  விஸ்வாமித்திரர்களையும், துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சாந்தீபினி முனியையும், கலியுகத்தில் தாத்தாத்ரேயர், சமீபகாலத்தில் நரசிம்ம சரஸ்வதியாக அவதாரம் செய்த போதிலும் கிருஷ்ண சரஸ்வதி யதீஸ்வரரிடம் சிஷ்யராக இருந்தார். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குருபரம்பரையின் பெருமையுள்ள பீடங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆதனால் தான் இங்கே உள்ள பீடாதிபதிகள் உலகத்தை உய்விக்க கூடியவர்களாக தருமத்தை காப்பாற்றும் வணங்கத்தக்கவர்கள் ஆகிறார்கள்.

அதற்கு மாறாக குரு பரம்பரை இல்லாத நவீன குருமார்கள் காளான்களை போல் முளைத்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆடம்பரம் தான் பிரதானம் உடல் புனிதம் தர்மநிஷ்டை ஆசாரம் முதலியவற்றிற்கு மதிப்பு கொடுப்புவார்கள் போல் காட்சி தருவார்கள். புனித நூல்களிலுள்ள ஸ்லோகங்களுக்கு வ்யாக்யானங்கள் யாரோ எழுதி கொடுத்தால் படித்துக்கொண்டு வேதா விற்பன்னர்கள் போல் மெய் மறக்க செய்வார்கள். ஸர்வஹிதம் அனைவரின் நலம், விஸ்வஷாந்தி, உலக அமைதி, என்று வெளியில் பேசும் இவர்கள் ஸத்ருசம்ஹார யாகங்கள், வசப்படுத்தும் கீழ்த்தரமான பூஜைகள் செய்தபடி ஆண்மிக வியாபாரம் நடத்தி கொண்டிருப்பார்கள். ஒரு பீடத்தில் எய்ட்ஸ் கள்ள தொடர்புகளுடன் இறந்துபோன ஆஸ்ரம வாசிகள் இருக்கிறார்கள். தவறுகளை மறைக்க மக்களின் பார்வையை திசை திருப்புவதற்கு கலி குருமார்கள் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். வெளியில் பாராயண வேள்விகள் ஞான உபதேசங்கள் புனித உபன்யாசங்கள் உள்ளே கலெக்சன் எவ்வளுவு, எந்த ப்ரோக்ராம் வைத்தால் எவ்வளவு வசூல் ஆகும், வருவாய் வரும், யாரை அழைக்கவேண்டும், இவைதான் பேச்சு.

மற்றோரு பக்கம் இந்த ஸ்வாமியர்கள் தங்களுடைய ஊருக்கு வரும் போது அங்குள்ள சீடர்கள் கடனோ உடனோ செய்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வார்கள். அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது அவர்களை கூப்பிட்டு உன்னுடைய ரீடிரெமென்ட் பெனிபிட்டில் எனக்கு எவ்வளுவு கொடுக்கிறாய் என்று கேட்கிறார்கள் என்றால் எவ்வளுவு கொடுமை? வாழ்க்கை முழுவதும் குடும்ப பொறுப்பை சுமந்து உழைத்து சம்பாதித்த பணத்தை இந்த அவலக்ஷணங்களின் தூதர்கள் இரக்கமின்றி ஸ்வாஹா செய்வது எவ்வளுவு ஈனச்செயல்? இன்னும் அபாரமான பேச்சு திறமையுடன் எவையெவையோ சொல்லி கிபிட் டீட்ஸ் எழுதி வாங்கி கண்முடித்தனமாக நம்பிய சீடர்களிடமிருந்து சொத்துக்களை கபளீகரம் செய்த ஸ்வாமிஜிக்கள் நம்மிடையே இருக்கிறார்கள். சீடர்களை அரசியலில் இறக்குவது, அரசியல் தலைவரை டிரஸ்டியாக நியமனம் செய்வது; மற்றோரு அரசியல் தலைவருக்கு சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது பார்க்கும் போது ஆன்மிகத்தை வியாபாரமாக்குவது தவிர வேறு என்ன என்று தோன்றுகிறது. இவர்களுக்கு கடவுளின் பெயர் வியாபாரத்திற்காகத்தான்.

தங்களுடைய தவறுகளை மறைப்பதற்காக நேர்மையான அதிகாரிகளை கூட செல்வாக்கால் பயமுறுத்துவது இவர்களுடைய அன்றாட செயல். இந்த ஆஸ்ரமங்களில் தவறான வழியில் வந்த பணம் கோடி கணக்கில் புழல்கிறது என்றால் அது மிகையாகாது. பக்தர்கள் கொடுத்த காணிக்கைகளை சுகபோகங்கள் பினாமி வியாபாரங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரங்களுக்கு திருப்பி விடுகிறார்கள். அக்க்கிரமங்களை தடுத்து தர்மத்தை காப்பாற்ற வேண்டிக்கொள்ளும் பக்தர்களை போலீஸின் உதவியுடன் பொய் வழக்குகளை போடுவோம் என்று மிரட்டுகிறார்கள் என்றால் இன்று தர்மம் எவ்வளவு அபாய கட்டத்தில் உள்ளதோ யோசித்து பாருங்கள். ஒரு கலி பீடாதிபதி என்னுடன் மக்கள் இரண்டு நாள் கல் எறிவார்கள் அதன் பிறகு மறந்து விடுவார்கள் என்று சொன்னதை கேட்டு ஷாக் ஆகி விட்டேன். இதுவே பக்தியுள்ள மக்களின் மீது அவருக்கு இருக்கிற அபார நம்பிக்கை. இந்த விஷயமே மஹாபாரதம் சாந்தி பர்வம் 5.77 ஸ்லோகத்தில் சொல்லப்பட்டது - “நல்லது கேட்டது தெரியாதவனை அநியாய வாழ்க்கை நடத்துபவனை குருவானாலும் விட்டுவிடவேண்டும்”.

ஒரு குரு அவருடைய செயலாளர் அமெரிக்க பயணம் முடித்துக்கொண்டு இந்தியாவுக்கு திரும்பி வரும் போது ஒரு அமெரிக்க விமான நிலையத்தில் பல ஆயிரம் டாலர்களுடன் பிடிபட்டு ரஹஸ்யம் வெளியாகிவிடும் என்ற அச்சத்தில் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டார்கள் என்றால் யார் உழைத்த பணம் போனது? மற்றோரு நாட்டில் ராசலீலையால் சங்கடம் வரவே பல கோடி பணத்துடன் செட்டில்மென்ட் செய்தார்கள் என்றால் யார் பணம் போன மாதிரி? பெண்களுடன் கள்ள தொடர்புகள் ஆன்மிகமா? நிலப்பத்திரங்களை அடகு வைத்துக்கொண்டு ஆண்மிக முகமுடியுடன் வியாபாரம் நடத்துவது எந்த வகையை சேரும்? பக்தர்களின் பணத்துடன் கட்டிடங்கள் கட்டி வணிகத்துக்கு பயன் படுத்துவது வியாபாரம் ஆகாதா? குரு தலையாட்டும் பொம்மை யாவதும் ஒருவரின் குரல்வளை மற்றோருவரின் கைகளில் சிக்கியிருப்பது கலி பீடங்களின் அமைப்பாக உள்ளது. திருட்டு ஸ்வாமிஜிக்களால் மனித நேயமில்லாத கொடூரமான கோணங்கள் ஆண்மிக அரங்கில் இடம் பெறுகின்றன. நடந்தபடி இருக்கின்றன. இவர்களால் குடும்ப கட்டமைப்பு சி தை ய் ந் து அன்பு அரவணைப்புகள் மறைந்து வாழ்க்கைகள் நாசமாகின்றன. இந்த பரிணாமங்கள் எல்லாமே ஹிந்து தர்மத்தை மிக மிக களங்கப்படுத்துபவை. மாசு சேர்ப்பவை. இன்றய  பஞ்சாங்கங்களில் கூட இதுவே எச்சரிக்கப்படுகின்றன. பக்கா திட்டங்களுடன் சுயநலமிகளுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, நிதி அரசர்களையே, ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள், பிரதமர் வந்து போனால் அங்கே நடக்கும் விவகாரங்களின் மீது விசாரணை நடத்த எந்த அதிகாரிக்கும் துணிவு இருக்காது என்று உத்திகள் திட்டுவது கொடுமை அல்லவா? இது எந்த குரு பரம்பரையில் இருந்து வந்த ஆன்மிகம்?

  

காஞ்சி பரமாச்சாரியார், சிருங்கேரி சந்திரசேகர  பாரதி மஹாஸ்வாமின்,  பெஜாவர் விஷ்வேஷ தீர்த்தர்களின் தர்மானுஷ்டானம் தெய்வ உபாசனா சக்திக்கு ஆயிரம் ஆயிரம் பேர் ஜாதி, மத, இன, சித்தாந்த வேறுபாடு இல்லாமல் வணங்கினார்கள். இவர்கள் ராக த்வேஷன்களுக்கு லௌகீகமான அரசியல் விஷயங்களுக்கு உடல் மன லோபங்களுக்கு பொறாமை, பகைமை, த்வந்த்வ பாவங்களுக்கு தொலைவில் இருந்தார்கள். இவர்கள் தான் சித்த யோகிகள் அவதார புருஷர்கள் என்றால், குரு தன்னுடைய குரு பரம்பரையிலிருந்து வந்த தத்துவ ஞானத்தையும் சாஸ்திர போதனைகளையும் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்து நல்ல சிந்தனை போக்கு தருமத்தை கடைபிடித்தல், நியாயம், கருணை உள்ளம் கொண்ட சிறந்த நபராக உருவாக்க கூடியவராக இருக்க வேண்டும்.  முண்டகோபநிஷத் 12.12ல் கூறியபடி குரு ஸ்ரோத்ரீயனாக வேதங்கள் படித்தவராக மட்டுமல்லாமல் சரியாக துல்லியமாக ஸ்ருதியை அனுசரித்து பிரம்மா நிஷ்ட்டையுடன் ப்ரஹ்மசர்யத்தை கடைபிடித்து வாழ வேண்டும். அவர்கள் எல்லோரும் உலகம் சுற்ற மாட்டார்கள். உலகமே இவர்களிடத்திற்கு வரும்.

இப்படிப்பட்டவர்கள் தான் ஜகத் குருமார்கள். அதனால் தான் தரும சிந்தனை உடைய பக்தி, வேத சாஸ்திரங்கள், ஆசாரம் சம்பரதாயங்களின் மீது அக்கறை, ஆன்மிக பரிபக்குவத்திற்காக பரிதவிக்கும் மக்கள் இவர்களை தேடி வந்து சரண் அடைவார்கள். பகவத்கீதை ஸ்லோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த மாதிரி மற்றவர்களுக்கு ஞானத்தை போதிப்பவன் சனாதன குரு பரம்பரையில் உள்ள குருவிடமிருந்து மட்டுமே கல்வியை கற்று அதன் வழியாக அடைந்த ஞானம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் குருவும் அல்ல; அவருடைய சொற்களை ஞானம் என்று சொல்லவும் முடியாது.  இதன் படி பார்த்தால் குருவை நம்பத்தகுந்தவராக உறுதி படுத்திக்கொள்ள குரு பரம்பரை எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறதோ என்று தெரியவரும். மற்றோரு பக்கம் கிரஹஸ்தராக இருந்து கொண்டு ப்ரஹ்மநிஷ்டையுடன் சுயநலம் இல்லாமல் சமூக நலனுக்காக சனாதன தர்மத்தை பிரசாரம் செய்பவர்கள் ப்ரஹ்மஸ்ரீக்கள். ஆக மொத்ததில் வியாபாரிகள் யார்? ஆச்சாரியர்கள் யார்? என்பதை மக்கள் தான் எடை போட்டு கொள்ளவேண்டும்.

ஆன்மிகத்திலும் தூய்மைப்பட்ட பணித்தேவை. சனாதன ஹிந்து தர்மத்தில் புனிதத்தை காப்பாற்றும் வகையில் அதிகாரிகள் அரசுகள் நிதி மன்றங்கள் செயல் பட வேண்டும். பகவான் ஸ்ரீராமருக்கு பெரு மதிப்பு மிக்கதாக அயோத்தியில் கோவில் காட்டினால் போதாது. அவர் காட்டிய வழியில் அறநெறிகள் தரும முறைகள் அமுலாக்கப்படவேண்டும். அப்போது தான் ஸ்ரீராமர் அயோத்தியில் அமைந்திருந்து  இந்த கலியுகத்தில் கூட ராம்ராஜ்ஜியத்தை அருள்வார்.

- Authored by ஸ்ரீராமபாத

https://www.facebook.com/Sriramapada.Bhagavathar/
https://www.youtube.com/@Sriramapada.Bhagavathar
facebook.com/Sriramapada

Note : 
This is a published editorial in a leading daily newspaper. 
Rights reserved. Copy, alteration, reproduction is prohibited. Sharing as it is permitted.









Popular posts from this blog

ప్రపంచం చుట్టూ తిరిగేవారు జగద్గురువులా ? జగదాచార్యులా ?

మహాలయపక్ష పితృకార్యాలు ... తప్పక చేయాలి